விழுப்புரம்: முன்னாள் முதல்வர் கருணாநிதியின் 101வது பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.விழுப்புரம் நகராட்சி 17வது வார்டு தி.மு.க., சார்பில், மகாராஜபுரத்தில் நடந்த விழாவிற்கு, லட்சுமணன் எம்.எல்.ஏ., தலைமை தாங்கி, கருணாநிதியின் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.மாவட்ட பொருளாளர் ஜனகராஜ், நகர செயலாளர் சக்கரை, நகர் மன்ற தலைவர் தமிழ்ச்செல்வி பிரபு, கவுன்சிலர்கள் ஜெயந்தி மணிவண்ணன், மணவாளன், பத்மநாபன், கோமதிபாஸ்கர் முன்னிலை வகித்தனர்.பின்னர், துப்புரவு பணியாளர்கள், ஏழை, எளிய மக்கள் என 500 பேருக்கு வேட்டி, சேலை, உள்ளிட்ட நலத்திட்ட உதவிகளும், அன்னதானமும் வழங்கப்பட்டது.வார்டு செயலாளர்கள் மணிவண்ணன், ராஜா, மாவட்ட பிரதிநிதி சக்கரபாணி, அவைத்தலைவர் கணேசன், பிரதிநிதிகள் முருகன், பாவாடை, துணைச் செயலாளர் சக்திவேல் உட்பட பலர் பங்கேற்றனர்.இதேபோல் கோலியனுார், வளவனுார், தாதாம்பாளையம், ப.வில்லியனுார் ஆகிய இடங்களில் நடந்த விழாவில், டாக்டர் லட்சுமணன் எம்.எல்.ஏ., ஏழை, எளிய மக்கள் ஆயிரம் பேருக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.