| ADDED : ஆக 01, 2024 07:10 AM
செஞ்சி: செஞ்சியில்மாற்றுத் திறனாளிகளுக்கு 39.23 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது.ஒன்றிய அலுவலகத்தில் மாவட்ட மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் நடந்த நிகழ்ச்சிக்கு, ஒன்றிய சேர்மன் விஜயகுமார் தலைமை தாங்கினார். பேரூராட்சி சேர்மன் மொக்தியார் முன்னிலை வகித்தார். மாற்றுத் திறனாளிகள் நல மாவட்ட அலுவலர் தங்கவேலு வரவேற்றார். அமைச்சர் மஸ்தான் நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.விழாவில், 33.39 லட்சம் ரூபாய் மதிப்பில்பார்வையற்ற மற்றும் செவித்திறன் பாதித்த 15 மாற்றுத் திறனாளிகளுக்கு செயலிகளுடன் கூடிய திறன் பேசியும், 36 மாற்றுத் திறனாளிகளுக்கு இணைப்பு சக்கரம் பொருந்திய பெட்ரோல் ஸ்கூட்டர்களும், 39 மாற்றுத் திறனாளிகளுக்கு மோட்டார் பொருந்திய தையல் இயந்திரங்களும் வழங்கப்பட்டது.நிகழ்ச்சியில் ஒன்றிய துணைச் சேர்மன் ஜெயபாலன், ஒன்றிய செயலாளர்கள், ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி தலைவர்கள், அலுவலர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.