| ADDED : ஆக 17, 2024 03:04 AM
திண்டிவனம்,: திண்டிவனம் ரயில் பயணிகள் சங்கத்தினர், முன்னாள் அமைச்சரை சந்தித்து நன்றி தெரிவித்தனர்.கொரோனா பேரிடர் காலத்தில், திண்டிவனம் ரயில் நிலையத்தில் நின்று சென்ற 9 ரயில்கள் நிறுத்தம் ரத்து செய்யப்பட்டது. இதனால் மாணவர்கள், வியாபாரிகள் உள்ளிட்ட பலருக்கு கடும் பாதிப்பை ஏற்படுத்தியது.இதுகுறித்து திண்டிவனம் ரயில் பயணிகள் சங்கம் சார்பில் ரத்து செய்யப்பட்ட ரயில்களை மீண்டும் திண்டிவனத்தில் நிறுத்தம் செய்ய வேண்டுமென்று, ரயில்வே துறை அதிகாரிகளுக்கு கோரிக்கை விடுத்தும் நிறைவேறவில்லை.இதை தொடர்ந்து சங்கத் தின் சார்பில், திண்டிவனத் திலுள்ள அ.தி.மு.க., முன் னாள் அமைச்சரும், ராஜ்யசபா உறுப்பினரான சண்முகத்தை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்தனர்.இதன் தொடர்ச்சியாக சண்முகம் எம்.பி., ராஜ்ய சபாவில், கொரோனா காலத்தில் திண்டிவனம் ரயில் நிலையத்தில் நின்று சென்ற ரயில்களை மீண்டும் இயக்க வேண்டும் என்று பேசினார்.இதை தொடர்ந்து திண்டிவனம் ரயில் பயணிகள் சங்க நிர்வாகிகள் திண்டிவனத்தில் சண்முகம் எம்.பி.,க்கு சால்வை அணிவித்து நன்றி தெரிவித்தனர்.