விழுப்புரம்: விழுப்புரம் ரயில்வே போலீஸ் ஸ்டேஷன், ரயில் நிலையம் அருகே கடந்த 75 ஆண்டுகளாக ஆங்கிலேயர் காலத்தில் இருந்து இயங்கி வந்தது. மிகவும் பழமை வாய்ந்த இந்த கட்டடத்தில், இன்ஸ்பெக்டர், எழுத்தர் அறை மட்டுமின்றி, கோப்புகளை வைக்கும் அறைகளும் சிதலமடைந்துள்ளது. இது மட்டுமின்றி, ஆண், பெண் கைதிகளுக்கு ஒரு அறை மட்டுமின்றி, ஆயுதங்களை வைக்க ஒரு அறை உள்ளது. மிகவும் பழுதான இந்த கட்டடத்தில், மழை நேரங்களில் போலீசார் பெரிதும் சிரமப்பட்டு வந்தனர். இந்த ரயில்வே போலீசார், தங்களுக்கு புதிய போலீஸ் ஸ்டேஷன் கோரி, ரயில்வே நிர்வாகத்திடம் முறையிட்டனர்.அதன் பேரில், புதிய போலீஸ் ஸ்டேஷன் கட்டுவதற்கு ரயில்வே நிர்வாகம் மூலம் ஒப்புதல் வழங்கப்பட்டது. விழுப்புரம் ரயில் நிலையத்தில், தற்போது விரிவாக்க பணிகள் மும்முரமாக நடக்கிறது. இந்த பணிகளில் ஒன்றாக, விழுப்புரம் ரயில் நிலையம் 1வது பிளாட்பாரத்தில், புதிய ரயில்வே போலீஸ் ஸ்டேஷன் கட்டும் பணிகள் நடந்தது.இதில், வரவேற்பாளர் அறை, இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் அறைகள், ஆண், பெண் கைதிகளை தனித்தனியாக வைப்பதற்கான செல்கள், ஆயுங்களை வைக்கும் அறை, கோப்புகளை வைக்கும் அறைகள் என நவீன வசதிகளுக்கு ஏற்ப கட்டப்பட்டுள்ளது. இந்த புதிய ரயில்வே போலீஸ் ஸ்டேஷன் திறப்பு விழா நேற்று நடந்தது.கணபதி ேஹாமத்தோடு பூஜைகள் நடத்தது. இந்த விழாவில், ரயில்வே இன்ஸ்பெக்டர் நிதிக்குமார், சப்-இன்ஸ்பெக்டர்கள் முத்துசெல்வம், அசோகன், தனிப்பிரிவு ஏட்டு ரவி உட்பட போலீசார் பலர் பூஜையில் கலந்து கொண்டனர்.