உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ராஷ்டிரிய பால் புரஸ்கார் விருது விண்ணப்பங்கள் வரவேற்பு

ராஷ்டிரிய பால் புரஸ்கார் விருது விண்ணப்பங்கள் வரவேற்பு

விழுப்புரம்: மத்திய அரசால் வழங்கப்படும் 2025ம் ஆண்டிற்கான ராஷ்டிரிய பால் புரஸ்கார் விருது பெற விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.கலெக்டர் பழனி செய்திக்குறிப்பு:மத்திய அரசின் மூலம் வழங்கப்படும், 2025ம் ஆண்டிற்கான பிரதமரின், ராஷ்டிரிய பால் புரஸ்கார் விருது பெற விண்ணப்பிக்கலாம். புதிய கண்டுபிடிப்பு, கல்வி, விளையாட்டு, கலை மற்றும் பண்பாடு, சுற்றுச்சூழல், சமூகசேவை போன்ற துறைகளில் வீர தீர செயல்புரிந்த குழந்தைகளுக்கு, மத்திய அரசால் பதக்கம், சான்றிதழ் மற்றும் ஒரு லட்சம் ரூபாய் ரொக்க பரிசுடன் வழங்கப்படுகிறது.எனவே, விழுப்புரம் மாவட்டத்தில், தகுதியுள்ள 5 முதல் 18 வயதிற்குட்பட்ட, இந்திய குடிமகனாக இருக்கும் குழந்தைகள், awards.gov.inஎன்ற இணையதள முகவரியில், வரும் ஜூலை 31ம் தேதிக்குள் இணையதள வழியில் விண்ணப்பிக்கலாம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ