உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க ஆலோசனை கூட்டம்

ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க ஆலோசனை கூட்டம்

செஞ்சி : தமிழ்நாடு ஓய்வு பெற்ற அரசு ஊழியர் சங்க செஞ்சி வட்ட கிளை பேரவை கூட்டம் மற்றும் நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் செஞ்சி காமதேனு திருமண மண்டபத்தில் நடந்தது.வட்ட தலைவர் சாம்பமூர்த்தி தலைமை தாங்கினார். செயலாளர் ஆனந்தன் செயல் அறிக்கை வாசித்தார். பொருளாளர் பூங்காவனம் நிதிநிலை அறிக்கை வாசித்தார். ஸ்ரீரங்க பூபதி கல்வி நிறுவன தாளாளர் ரங்க பூபதி, மாநிலத் தலைவர் கங்காதரன் ஆகியோர் பேசினர். நிர்வாகிகள் தரணேந்திரதாஸ், ஜெயராமன், நடராசன், லட்சுமிபதி, குமார், செல்வராஜ், கோடீஸ்வரன், சிவநாதன் உட்பட பலர் பங்கேற்றனர். சங்க உறுப்பினர்களுக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. இதில் 70 வயதை கடந்த ஓய்வூதியர்களுக்கு 10 சதவீதம் ஊதிய உயர்வு வழங்காததையும், மருத்துவ காப்பீடு வழங்குவதை காலம் தாழ்த்தி வருவதையும், அகவிலைப்படி வழங்காததையும் கண்டித்தும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. தொடர்ந்து சங்க புதிய நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டனர். வட்ட துணை தலைவர் பரமசிவம் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ