மேலும் செய்திகள்
கூட்டுறவு வங்கி பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
2 hour(s) ago
தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
2 hour(s) ago
லட்சுமி நாராயாண பெருமாள் கோவிலில் சிறப்பு அபிேஷகம்
2 hour(s) ago
வானுார்: நிறுத்தப்பட்ட தார் சாலையை மீண்டும் துவங்கி முடிக்க வலியுறுத்தி, கொமடிப்பட்டு கிராம மக்கள் அரசு பஸ்சை சிறைபிடித்து மறியலில் ஈடுபட்டனர்.கிளியனுார் அடுத்த கொமடிப்பட்டு ஊராட்சியில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ள ஆதிதிராவிட மக்கள் சுடுகாட்டிற்குச் செல்லும் பாதையை நில ஆர்ஜிதம் செய்து, தார் சாலை அமைக்கும் பணி சில தினங்களுக்கு முன் துவங்கியது.இந்த தார் சாலை உள்ள பகுதி தங்களுக்கு சொந்தமான இடம் எனக் கூறி ஒரு சிலர் பணியை தடுத்து நிறுத்தினர்.இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி மக்கள் நேற்று காலை 8:45 மணிக்கு, உப்புவேலுார் - தலக்காணிக்குப்பம் சாலையில் திண்டிவனம் சென்ற அரசு பஸ்சை சிறை பிடித்து மறியலில் ஈடுபட்டனர்.தகவலறிந்த கிளியனுார் போலீசார் சம்பவ இடத்திற்குச் சென்று, மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், சாலை அமைக்கும் பணியை எதிர்க்கும் நபர்களிடமும், தாசில்தார் பேசி, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்தனர். இதையேற்று பொது மக்கள் மறியலை கைவிட்டு 9:15 மணியளவில் கலைந்து சென்றனர்.
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago