மேலும் செய்திகள்
கூட்டுறவு வங்கி பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
2 hour(s) ago
தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
2 hour(s) ago
லட்சுமி நாராயாண பெருமாள் கோவிலில் சிறப்பு அபிேஷகம்
2 hour(s) ago
விழுப்புரம்: விழுப்புரம் நேஷனல் அகாடமியில் 1,768 இடைநிலை ஆசிரியர்கள் நியமனத் தேர்வுக்கான மாதிரி தேர்வு நடந்தது.ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 1,768 இடைநிலை ஆசிரியர்கள் தேர்வுக்கான நியமன தேர்வு, வரும் 21ம் தேதி நடைபெற உள்ளது. இதற்கான சிறப்பு பயிற்சி வகுப்பு, விழுப்புரம் நேஷனல் அகாடமியில் கடந்த 6 மாதங்களாக நடந்தது. இதில், 300க்கும் மேற்பட்டோர் பயிற்சி பெற்றனர்.இவர்களுக்கு சிறப்பு வல்லுநர்களால் பயிற்றுவிக்கப்பட்டு வந்தது. இந்த பயிற்சிக்கான மாதிரி தேர்வு, நேஷனல் அகாடமியில் நேற்று நடந்தது.பயிற்சி மைய நிர்வாகி செல்வகுமார், பயிற்சி மைய முதல்வர் சரவணன் மேற்பார்வையில் தேர்வு நடந்தது. ஆசிரியர்கள் சக்திவேல், பன்னீர்செல்வம், வீராசாமி, குபேர், ஆண்ரூஸ், வெங்கடேசன், லட்சுமிதேவி, சுரேஷ் ஆகியோர் கண்காணித்தனர்.
2 hour(s) ago
2 hour(s) ago
2 hour(s) ago