உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விக்கிரவாண்டியில் மாதிரி ஓட்டுப்பதிவு

விக்கிரவாண்டியில் மாதிரி ஓட்டுப்பதிவு

விக்கிரவாண்டி: விக்கிரவாண்டி தொகுதி ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் மாதிரி ஓட்டு பதிவு சோதனை நடந்தது.விழுப்புரம் லோக்சபா தனி தொகுதிக்குட்பட்ட விக்கிரவாண்டி சட்டசபை தொகுதியில் 275 ஒட்டுச்சாவடிகள் உள்ளன. இங்கு 330 ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் வாக்காளர்கள் ஓட்டளிக்க வேட்பாளர்கள் பெயர், சின்னம் பொருத்தும் பணி நடந்தது.நேற்று முன்தினம் தாலுகா அலுவலகத்தில் 5 சதவீத ஓட்டு பதிவு இயந்திரங்களை தேர்ந்தெடுத்து அதில் ஓட்டுப் பதிவு மாதிரி சோதனை அனைத்து கட்சி பிரதிநிதிகள் முன்னிலையில் நடந்தது.விக்கிரவாண்டி தொகுதி உதவி தேர்தல்நடத்தும் அலுவலர் சந்திரசேகர், தாசில்தார் யுவராஜ், மண்டல அலுவலர்கள் பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை