உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / கோண்டூர் ஊராட்சியில் மரக்கன்றுகள் நடும் விழா

கோண்டூர் ஊராட்சியில் மரக்கன்றுகள் நடும் விழா

கண்டமங்கலம் : கண்டமங்கலம் ஒன்றியம் கோண்டூர் ஊராட்சியில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது.கண்டமஙகலம் ஒன்றியம் கோண்டூர் ஊராட்சியில் துாய்மை பாரத இயக்கத்தின் சார்பில் மகாத்மாகாந்தி தேசிய ஊரக வேலை உறுதி திட்டத்தின் மூலம் மரக்கன்றுகள் நடும் பணி 16ம் தேதி தொடங்கி 20ம் தேதிவரை நடைபெறுகிறது.இத்திட்டத்தின் மூலம் கோண்டூர் காலனியில் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. நிகழ்ச்சிக்கு ஊராட்சிமன்ற தலைவர் ஏழுமலை தலைமையேற்று மரக்கன்றுகள் நடும் பணியை தொடங்கி வைத்தார். கிராம ஊராட்சி பி.டி.ஓ., சிவக்குமார் முன்னிலை வகித்தார். நிகழ்ச்சியில் ஊராட்சிமன்ற துணை தலைவர் ராஜேஸ்வரி தனசேகரன், ஊராட்சி செயலர் அருணகிரி மற்றும் வார்டு உறுப்பினர்கள் உள்பட பலர் கலந்துகொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ