உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / செஞ்சி வேளாண் விற்பனைக் கூடத்தின் விளைபொருளுக்கு தேசிய அளவில் வரவேற்பு வேளாண் விற்பனைக்குழு செயலாளர் தகவல்

செஞ்சி வேளாண் விற்பனைக் கூடத்தின் விளைபொருளுக்கு தேசிய அளவில் வரவேற்பு வேளாண் விற்பனைக்குழு செயலாளர் தகவல்

விழுப்புரம் : செஞ்சி வேளாண் விற்பனைக்கூடம் மூலம் விற்பனை செய்யும் விளை பொருளுக்கு தேசிய அளவில் வரவேற்பு உள்ளதால் விவசாயிகள் பயன்படுத்திக் கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது.மாவட்ட வேளாண் விற்பனைக்குழு செயலாளர் சந்துரு செய்திக்குறிப்பு:விழுப்புரம் மாவட்ட விற்பனைக்குழுவின் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும், செஞ்சி வேளாண் விற்பனைக் கூடத்தில், இந்த நிதியாண்டில் மட்டும் 15 ஆயிரத்த 416 விவசாயிகளிடமிருந்து, 52 கோடியே 51 லட்சத்து 86 ஆயிரத்து 900 ரூபாய் மதிப்பில் 21 ஆயிரத்த 958 மெ.டன் (2,74,475 மூட்டைகள்) அளவிலான வேளாண் விளைப்பொருட்களின் வர்த்தகம் நடைபெற்று பயனடைந்துள்ளனர்.செஞ்சி மார்க்கெட் கமிட்டியில் நல்ல விலை கிடைப்பதால், தினமும் நெல், கம்பு, கேழ்வரகு, வேர்க்கடலை, எள், உளுந்து, பச்சைபயிறு, கொள்ளு, திணை, பருத்தி, பனிப்பயிர், தட்டைபயிர், மிளகாய் போன்ற பல்வகை வேளாண் விளைபொருட்கள் விழுப்புரம் மட்டுமில்லாமல், திருவண்ணாமலை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் இருந்தும், விவசாயிகள் விளைபொருட்களைக் கொண்டு வருகின்றனர்.இந்த விற்பனைக்கூடம் மூலம் விற்பனை செய்யும் நெல் மற்றும் விளை பொருளுக்கு தேசிய அளவில் பெரும் வரவேற்பு இருப்பதும் குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த விற்பனைக் கூடத்தில் சரியான எடை மற்றும் உடனுக்குடன் விவசாயிகளின் வங்கி கணக்கிற்கு நேரடியாக, மின்னணு பண பரிவர்த்னை மூலம் பட்டுவாடா செய்யப்படுகிறது.செஞ்சி பகுதியை சேர்ந்த நெல் மற்றும் இதர வேளாண் விளைபொருட்கள் பயிரிடும் விவசாயிகள், இந்த கமிட்டியில் மின்னணு ஏலத்தின் மூலம் விற்பனை செய்து அதிக லாபம் அடைந்து பயனடைய அறிவுறுத்தப்படுகிறார்கள்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி