உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / காட்பாடி மேம்பாலம் பகுதியில் குளம் போல் தேங்கும் கழிவுநீர்

காட்பாடி மேம்பாலம் பகுதியில் குளம் போல் தேங்கும் கழிவுநீர்

விழுப்புரம் : விழுப்புரம் காட்பாடி மேம்பாலம் அருகே கழிவு நீர் குளம்போல் தேங்கி நிற்பதை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.விழுப்புரம் மேல்தெரு, காட்பாடி ரயில்வே பாலம் அருகே கருணாநிதி நகர் பகுதியில், கடந்த ஓராண்டுக்கும் மேலாக கழிவு நீர் வெளியேறாமல் சாலையில் தேங்கி நிற்கிறது. அந்த பகுதி குடியிருப்புகளிலிருந்து வெளியேறும் கழிவு நீர், வாய்க்கால் வழியாக செல்ல வழியின்றி அடைபட்டுள்ளது.இதனால், கால்வாய் வழிந்து, கழிவு நீர் காட்பாடி ரயில்வே மேம்பாலத்தின் கீழ் குளம்போல் தேங்கி நிற்கிறது. மேலும், இந்த கழிவுநீரில் குப்பைகள், பிளாஸ்டிக் கழிவுகள் கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசுவதுடன் சுகாதார சீர்கேடு ஏற்பட்டுள்ளது.இந்த பகுதியில் நீண்ட காலமாக கழிவு நீர் தேங்கும் பிரச்னைக்கு தீர்வு காண அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ