உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வணிகர் தினத்தில் கடையடைப்பு வெறிச்சோடிய கடை வீதிகள்

வணிகர் தினத்தில் கடையடைப்பு வெறிச்சோடிய கடை வீதிகள்

விழுப்புரம், : விழுப்புரம் மாவட்டத்தில், வணிகர் தினத்தையொட்டி நேற்று கடைகள் அடைக்கப்பட்டதால் கடை வீதிகள் வெறிச்சோடியது.தமிழகத்தில் ஆண்டு தோறும் மே 5ம் தேதி வணிகர் தினமாக கடைபிடித்து வரும் வணிகர் சங்கத்தினர் பலர், அன்றைய தினம் கடைகளுக்கு விடுமுறையும் அளிக்கின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் நேற்று கடைகள் அடைக்கப்பட்டிருந்தது.விழுப்புரம் நகரில், முக்கிய வணிக வீதிகளில் காலை 7:00 மணி முதல் மாலை 5:00 மணி வரை பெரும்பாலான கடைகள் மூடப்பட்டு கடைவீதிகள் வெறிச்சோடியது. இதே போல், திண்டிவனம் நகரம், செஞ்சி, வளவனுார், கோட்டக்குப்பம் பேரூராட்சி பகுதிகளிலும் கடைகள் மூடப்பட்டிருந்தன. மெடிக்கல், டீ கடைகள், பங்க் கடைகள் மட்டும் திறந்திருந்தன. பல இடங்களில் உணவகங்களும் மூடப்பட்டிருந்தன.

மயிலம்

வணிகர் தினத்தையொட்டி மயிலம் பகுதியில் அனைத்து கடைகளும் மூடப்பட்டன. தொடர்ந்து கூட்டேரிப்பட்டில் நடந்த அனைத்து வணிகர்கள் சங்க கூட்டத்திற்கு மயிலம் வணிகர் சங்க தலைவர் மனோகர் தலைமை தாங்கினார். பொருளாளர் வாசு வரவேற்றார். செயலாளர் சதீஷ்குமார், துணைச் செயலாளர்கள் ஏழுமலை, சீனு முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில், கூட்டேரிப்பட்டை துாய்மையான நகரமாக வைத்திருப்பது. சாலை ஓரத்தில் மரக் கன்றுகள் நடுவது என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

விக்கிரவாண்டி

விக்கிரவாண்டி வர்த்தகர் சங்கம் சார்பில் வணிகர் தின விழாவையொட்டி கடைகளுக்கு விடுமுறை அறிவித்து வர்த்தக சங்கத் தலைவர் ராஜபாண்டியன் தலைமையில் மதுரையில் நேற்று நடந்த மாநாட்டில் பங்கேற்க அனைத்து வியாபாரிகளும் தனி பஸ்சில் புறப்பட்டு சென்றனர்.வர்த்தக சங்க அமைப்பாளர் தனசேகரன் ,கவுரவ தலைவர் சம்பத், செயலாளர் ஜியாவுதீன், பொருளாளர் சாதிக் பாட்ஷா, மாவட்ட நிர்வாகிகள் குமாரகிருஷ்ணன், ராஜாராம், செயற்குழு உறுப்பினர் சர்க்கார் பாபு மற்றும் சங்க நிர்வாகிகள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





முக்கிய வீடியோ