உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சிகா பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை

சிகா பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை

விழுப்புரம்: விழுப்புரம் கப்பியாம்புலியூர் சிகா மேல்நிலைப் பள்ளி 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளது.இப்பள்ளியில் தேர்வு எழுதிய 74 மாணவ, மாணவியர்கள் அனைவரும் தேர்ச்சி பெற்றனர். கடந்த கல்வியாண்டுகளில் தொடர்ந்து 100 சதவீதம் தேர்ச்சி அடைந்து, சாதனை புரிந்து வருகிறது. மாணவர் நவீன் 500க்கு 492 மதிப்பெண்ணும், மாணவி ஜிஷ்னுதா 488, ஹேமா 500க்கு 486 மதிப்பெண்களும் எடுத்து சிறப்பிடம் பெற்றுள்ளனர்.இதே போல், 5 மாணவர்கள் கணிதம் பாடத்தில் 100க்கு100 எடுத்துள்ளனர். பொது தேர்வில் உச்ச மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவிகளை சிகா கல்வி அறக்கட்டளை தலைவர் சாமிநாதன், பள்ளி முதல்வர் கோபால் மற்றும் ஆசிரியர்கள், ஊழியர்கள் பாராட்டினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ