உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / நந்தன் கால்வாய் புனரமைப்பு இழுபறி சமூக ஆர்வலர் அய்யனார் கவலை

நந்தன் கால்வாய் புனரமைப்பு இழுபறி சமூக ஆர்வலர் அய்யனார் கவலை

விழுப்புரம்: நந்தன் கால்வாய் புனரமைப்பு திட்டத்தை முழுமையாக செயல்படுத்த வேண்டுமென சமூக ஆர்வலர் அய்யனார் கோரிக்கை விடுத்துள்ளார்.விழுப்புரம் மாவட்ட ஐ.என்.டி.சி.யூ., தலைவரான சமூக ஆர்வலர் அய்யனார் கூறியதாவது:திருவண்ணாமலை மாவட்டத்தில், 10.40 கி.மீ., மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் 25.46 கி.மீ., துாரத்திற்கு நந்தன் கால்வாய் அமைந்துள்ளது. இந்த கால்வாய், திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களில் உள்ள 120 கிராமங்களில் நீர்பாசனத்திற்கு ஆதாரமாக உள்ளது.பல ஆண்டுகளுக்கு முன் நந்தன் கால்வாயில் தொடர்ந்து தண்ணீர் ஓடிய நிலையில், தற்போது வரத்து வாய்க்கால்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளன. இதனால், மழைக் காலங்களில் மட்டும் மழை நீர் வழிந்தோடும் நிலை உள்ளது.இந்நிலையில் நந்தன் கால்வாய் சீரமைக்கப்பட வேண்டுமென விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் தரப்பில் தொடர்ந்து அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டது. இதன் காரணமாக, கடந்த 2015ம் ஆண்டு நந்தன் கால்வாய் சீரமைப்பு பணிக்காக 14.6 கோடி ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது.இதையடுத்து செய்யாறு வழியாக பெண்ணையாற்றுடன் பாலாற்றையும் இணைப்பதற்கு 250 கோடியில் திட்டம் முன்மொழியப்பட்டது.முன்னாள் அமைச்சர் கோவிந்தசாமி, கடந்த 1954ம் ஆண்டு விக்கிரவாண்டி தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருந்த போது, எடுத்த முயற்சியின் காரணமாக நந்தன் கால்வாய் புனரமைப்பு திட்டம் துவங்கப்பட்டது. காலப்போக்கில், திட்டம் முழுமையடையாமல் கிடப்பில் போனது.இதற்கடுத்து பல்வேறு புதிய திட்டங்கள் கொண்டு வரப்பட்டும், நந்தன் கால்வாய் முழுமையாக சீரமைக்கப்படவில்லை. பருவமழைக் காலங்களில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர், ஆறுகளின் வழியாக கடலில் கலந்து வீணாகிறது.இதனை சேமிக்கும் வகையில், நந்தன் கால்வாய் திட்டத்தை புனரமைத்து, விவசாயிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாக்க தமிழக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை