மேலும் செய்திகள்
கூட்டுறவு வங்கி பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
7 hour(s) ago
தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
7 hour(s) ago
லட்சுமி நாராயாண பெருமாள் கோவிலில் சிறப்பு அபிேஷகம்
7 hour(s) ago
விழுப்புரம் மாவட்ட காவல் துறையில் உள்ள சோஷியல் மீடியா, தகவல்களை தாமதமாக பதிவிடுவதாலும், எஸ்.பி.,யை சந்திக்க முடியாததாலும் நிருபர்கள் புலம்புகின்றனர். விழுப்புரம் மாவட்டத்தில் கொலை, அதிகளவிலான நகை கொள்ளை சம்பவங்கள் மற்றும் கடத்தல் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் கைது செய்யப்பட்டால், நிருபர்களுக்கு எஸ்.பி., தலைமையில் செய்தியாளர்கள் சந்திப்பு கூட்டம் நடத்தி தகவல்களை வெளியிடுவது கடந்த காலங்களில் வழக்கமாக இருந்தது.இந்த நிகழ்வு மூலம் நிருபர்களும், மக்கள் பாதிக்க கூடிய சட்டம், ஒழுங்கு பிரச்னைகளை எஸ்.பி.,யை நேரில் சந்தித்து கூறுவதால், அவரும் அதன் மீது நடவடிக்கை எடுத்தார்.தற்போதுள்ள எஸ்.பி., தீபக் சிவாச், பொறுப்பேற்ற நாளில் இருந்து நிருபர்களை சந்திப்பதை தவிர்த்துள்ளார். நிருபர்களுக்கு கூற வேண்டிய தகவல்களை எஸ்.பி., அலுவலகத்தில் செயல்படும் சோஷியல் மீடியா துறை மூலம் 'வாட்ஸ்ஆப்' குழுவில் குற்றவாளிகள் புகைப்படம், வழக்கு தொடர்பான விபரங்கள், குண்டாஸ், தடுப்பு காவல் மற்றும் காவல் துறை மீட்டிங், ஐ.ஜி., ஆய்வு போன்ற அனைத்தையும் அனுப்புகின்றனர். இதனால், எஸ்.பி.,யை நிருபர்கள் நேரில் தொடர்பு கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. காவல் துறையின் சோஷியல் மீடியா பல முக்கிய தகவல்களை தாமதமாக 'வாட்ஸ்ஆப்'பில் பதிவிடுவதால், நிருபர்களால் நேரத்திற்கு அந்த தகவலை கொண்டு சேர்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. எஸ்.பி., அலுவலகத்தில் உள்ள இதுபோன்ற குறைபாடுகளை களைந்து நிருபர்களை மாதத்திற்கு ஒரு முறையாவது சந்திப்பதற்கான நடவடிக்கையை எஸ்.பி., மேற்கொள்ள வேண்டும்.
7 hour(s) ago
7 hour(s) ago
7 hour(s) ago