உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மாணவர்களுக்கு பேச்சு போட்டி

மாணவர்களுக்கு பேச்சு போட்டி

விழுப்புரம் : அம்பேத்கர், கருணாநிதி பிறந்த நாளையொட்டி விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் மாணவர்களுக்கு மாவட்ட அளவிலான பேச்சுப் போட்டி நடைபெற உள்ளது.கலெக்டர் பழனி செய்திக்குறிப்பு:அம்பேத்கர், கருணாநிதி பிறந்த நாளையொட்டி, வரும் 30, 31ம் தேதிகளில் காலை 10.00 மணிக்கு நடைபெற உள்ளது. கல்லுாரி மாணவர்களுக்கான போட்டியில் வெற்றி பெறுவோருக்கு முதல் பரிசு 5,000 ரூபாய், இரண்டாம் பரிசு 3,000 ரூபாய், மூன்றாம் பரிசு 2,000 ரூபாய் மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது.அரசுப்பள்ளி மாணவர்கள் இரண்டு பேருக்கு சிறப்பு பரிசாக 2,000 ரூபாய் வீதம் வழங்கப்பட உள்ளது. மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லுாரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் போட்டியில் பங்கேற்று பயன்பெற கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ