உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வேகத்தடைகளில் வெள்ளை வர்ணம்

வேகத்தடைகளில் வெள்ளை வர்ணம்

செஞ்சி : தினமலர் செய்தி எதிரொலியாக செஞ்சியில் உள்ள வேகத்தடைகளில் நெடுஞ்சாலைத்துறையினர் நேற்று வெள்ளை வர்ணம் அடித்தனர்.விழுப்புரம் மாவட்டத்தில் கிராம சாலைகள், மாநில நெடுஞ்சாலைகளில் உள்ள வேகத் தடைகளில் வெள்ளை நிற பெயிண்ட் இல்லாமல் இருப்பதால் அடிக்கடி விபத்துக்கள் நடந்து வந்தன. இதனை சுட்டிக்காட்டி, தினமலர் நாளிதழில் நேற்று செய்தி வெளியானது. இதையடுத்து செஞ்சி நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை எடுத்து செஞ்சி நகரில் உள்ள அனைத்து வேகத்தடைகளுக்கும் வெள்ளை வர்ணம் அடித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை