உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஸ்ரீநிவாசப்பெருமாள் கோவில்  மகா கும்பாபிேஷகம்

ஸ்ரீநிவாசப்பெருமாள் கோவில்  மகா கும்பாபிேஷகம்

வானூர்: திருச்சிற்றம்பலம் கூட்ரோடு ஸ்ரீநிவாசப்பெருமாள் கோவில் மகா கும்பாபிேஷக விழா நடந்தது.வானூர் வட்டம் திருச்சிற்றம்பலம் கூட்ரோடு ஸ்ரீ ராமானுஜம் நகரில் ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீநிவாச பெருமாள் கோவில் அமைந்துள்ளது. இக்கோவில் திருப்பணிகள் முடிவடைந்து, கடந்த 10ம் தேதி கும்பாபிேஷக விழா துவங்கியது. அன்றயை தினம் அனுக்ஞை, முதற்கால ஹோமமும், பூர்ணாஹூதியும், இரண்டாம் கால ஹோமமும் நடந்தது. நேற்று முன்தினம் காலை 7;00 மணிக்கு மூன்றாம் கால ஹோமமும், பூர்ணாஹூதியும் நடந்தது.மாலை 6;00 மணிக்கு நான்காம் கால ஹோமமும் நடந்தது. நேற்று காலை 9;00 மணிக்கு ஸ்ரீநிவாசபெருமாள் கோவில் மகா கும்பாபிேஷக விழா நடந்தது. மாலை 6;00 மணிக்கு ஸ்ரீதேவி, பூதேவி சமேத ஸ்ரீநிவாசபெருமாளுக்கு திருக்கல்யாணமும், தொடர்ந்து சுவாமி வீதியுலாவும் நடந்தது.மகா கும்பாபிேஷக விழாவில் திரளான பக்தர்கள் பங்கேற்று சுவாமி தரிசனம் செய்தனர். நிகழ்ச்சியில், புதுச்சேரி எம்.எல்.ஏ., சிவா, முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர்கள் பாபு சத்தியமூர்த்தி, வெங்கடசாமி, முன்னாள் ஒன்றிய கவுன்சிலர் நாராயணன், திருச்சிற்றம்பலம் ஊராட்சி மன்ற தலைவர் வெங்கடேசன், கவுன்சிலர் புவனேஸ்வரி ராமதாஸ் உட்பட பலர் கலந்து கொண்டனர். விழாவிற்கான ஏற்பாடுகளை கோவில் பரம்பரை அறங்காவலர் பாவாடை பிள்ளை, கிருஷ்ணமூர்த்தி ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி