உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / புனித பிரான்சிஸ் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் சென்டம்

புனித பிரான்சிஸ் பள்ளி 10ம் வகுப்பு தேர்வில் சென்டம்

திண்டிவனம்: திண்டிவனம் அடுத்த சாரம் புனித பிரான்சிஸ் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வில் மாணவர்கள் 100 சதவீதம் தேர்ச்சி பெற்று சாதனை படைத்துள்ளனர்.இப்பள்ளியில் தேர்வு எழுதிய 54 மாணவ, மாணவியர்களும் தேர்ச்சி பெற்றனர். 450 மதிப்பெண்ணுக்கு மேல் 7 பேர், 400க்கு மேல் 14 பேர், 350க்கு மேல் 15 பேர், 300க்கு மேல் 17 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.தேர்ச்சி பெற்ற மாணவர்களையும், அவர்களை ஊக்குவித்த பள்ளி ஆசிரியர்களையும், ஒத்துழைப்பு அளித்த பெற்றோர்களையும் பள்ளியின் முதல்வர் அந்தோணிசாமி, பள்ளி தாளாளர் ஜெயராஜ் பாராட்டினர்.இது குறித்து பள்ளி முதல்வர் அந்தோணிசாமி கூறுகையில், 'இந்த பள்ளி ஒவ்வொரு ஆண்டும் சாதனை படைத்து வருகிறது. பள்ளியில், அனைத்து அடிப்படை வசதிகளும் உள்ளன. இப்பள்ளியில் தற்போது எல்.கே.ஜி., முதல் பிளஸ் 1 வரை மாணவர் சேர்க்கை நடக்கிறது. மாணவர்களின் வசதிக்காக பஸ் வசதிகளும் ஏற்படுத்தப்பட்டுள்ளது' என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ