வானூர் : பா.ம.க., மாநில செயற்குழு உறுப்பினர் (எம்.ஆர்.எம்.,) நல்லாவூர் ராஜூ-ராஜேஸ்வரி ராஜூ இல்லத்திருமண வரவேற்பு விழா மொரட்டாண்டி டோல்கேட் அருகில் உள்ள சங்கமித்ரா கன்வென்ஷன் சென்டரில் நடந்தது. விழாவில், புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி, முன்னாள் முதல்வர் நாராயணசாமி, மேல் மருவத்தூர் அடிகளார் செந்தில், முன்னாள் அமைச்சர் சண்முகம் ஆகியோர் மணமக்கள் ஜெயச்சந்திரன், சிவாம்பிகை (எ) விஜியலட்சுமியை வாழ்த்தினர். மேலும், விழாவில் புதுச்சேரி முன்னாள் எம்.எல்.ஏ., அனந்தராமன், எம்.எல்.ஏ.,கல்யாணசுந்தரம், மயிலம் எம்.எல்.ஏ., சிவக்குமார், பேராசிரியர் தீரன், முன்னாள் வாரிய தலைவர் மதி, முன்னாள் எம்.எல்.ஏ.,க்கள் மாசிலாமணி, சேதுநாதன், தி.மு.க., மாவட்ட பொருப்பாளர் சேகர், முன்னாள் சேர்மன் வெங்கடேசன், பா.ம.க., மாவட்ட செயலாளர் ஜெயராஜ், சமூக நீதி பேரவை மாநில செயலாளர் வக்கீல் பாலாஜி, முன்னாள் நகர செயலாளர் ரமேஷ், மாநில வன்னியர் சங்க தலைவர் கருணாநிதி, விழுப்புரம் தங்கஜோதி, பழனிவேல், அன்புமணி, செஞ்சி ராஜேந்திரன், கனல் பெருமாள், அறவாழி, திருப்பூர் பா.ம.க., முன்னாள் மாநில பொருளாளர் மன்சூர், திருப்பூர் மாவட்ட செயலாளர் ரமேஷ், மணக்குள விநாயகர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனை டாக்டர் நாராயணசாமி, மயிலம் பொம்மபுர ஆதீனம் சிவஞான பாலய சுவாமிகள், புதுச்சேரி பா.ம.க., மாநில அமைப்பாளர் கணபதி, புதுச்சேரி கருடன் சோப்பு தொழிற்சாலை உரிமையாளர் கோபி மற்றும் அரசியல் பிரமுகர்கள், தொழிலதிபர்கள் என பலர் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினர். விழாவிற்கு வந்தவர்களை, நல்லாவூர் ராஜூ-ராஜேஸ்வரி ராஜூ, தில்லை வில்லாளன், ராஜவள்ளி தில்லை வில்லாளன் ஆகியோர் வரவேற்று நன்றி கூறினர்.