உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / மாற்றுத் திறனாளிகள் சங்க மாநில பொதுக்குழு

மாற்றுத் திறனாளிகள் சங்க மாநில பொதுக்குழு

விழுப்புரம்:விழுப்புரத்தில் புதிய அலை மாற்றுத் திறனாளிகள் சங்க மாநில பொதுக்குழு கூட்டம் நடந்தது.விழுப்புரம் சங்க அலுவலகத்தில் நடந்த கூட்டத்திற்கு, நிறுவன தலைவர் அண்ணாமலை தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் மாரிமுத்து முன்னிலை வகித்தார். செயலாளர் தமிழரசி வரவேற்றார். சிறப்பு அழைப்பாளர்களாக டிசம்பர் 3 இயக்க மாநில தலைவர் தீபக், கிராம மேம்பாட்டு பவுண்டேஷன் ஆப் இந்தியா நிறுவனர் அறவாழி, லயோலா கல்லுாரி பேராசிரியர் ரத்னா சிறப்புரையாற்றினர்.கூட்டத்தில், சங்கத்திற்கு புதிய பொறுப்பாளர்களை தேர்ந்தெடுப்பது. உறுப்பினர்களுக்கு, இந்த அமைப்பின் நோக்கங்கள், செயல்பாடு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவது. சாலையோரம் பெட்டிக்கடை வைத்தல், ஆவின்பாலகம் வைத்தல். 3 மாதத்திற்கு ஒரு முறை அரசு அலுவலர்களைக் கொண்டு, மாற்றுத் திறனாளிகளுக்கான குறைகளைக் கேட்டறிந்து அரசு திட்டங்கள் கிடைக்கச் செய்வது என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



முக்கிய வீடியோ