| ADDED : மே 28, 2024 11:29 PM
திண்டிவனம் : திண்டிவனம் மேம்பாலத்தில் போலீஸ் தடையை மீறி ஆட்டோக்களை நிறுத்தி, பயணிகளை ஏற்றுவதால் விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது. திண்டிவனம் மேம்பாலத்தின் மேல்பகுதியில், நான்கு மார்க்கத்திலிருந்து வரும் வாகனங்கள் தடையில்லாமல் செல்லும் வகையில் உள்ளது. மேம்பாலத்தின் மேல்பகுதியை ஆட்டோ ஸ்டேண்டாக மாற்றி, ஆட்டோக்களை வரிசையாக நிறுத்தி, பயணிகளை ஏற்றி வந்தனர். குறுகிய இடத்தில் போக்குவரத்திற்கு இடைஞ்சலாக ஆட்டோக்களை நிறுத்தி, பயணிகளை ஏற்றுவதால் அடிக்கடி விபத்துக்கள் நடந்து வந்தது. இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன், திண்டிவனம் சப்கலெக்டர் அந்த வழியாக சென்ற போது, ஆட்டோக்களை நிறுத்தி பயணிகளை ஏற்றிச்செல்வதை பார்த்தார். இதை தொடர்ந்து மேம்பாலத்தின் மேல்பகுதியில் ஆட்டோக்கள் நிறுத்துவதை தடுக்க போலீசாருக்கு உத்தரவிட்டார். இதன் பேரில் இரண்டு நாட்கள் போக்குவரத்து போலீசார், மேம்பாலத்தில் நின்று, ஆட்டோக்களை நிறுத்துபவர்களை எச்சரித்து அனுப்பி வைத்தனர்.இந்நிலையில் தற்போது போலீசாரின் எச்சரிக்கையை மீறி, வழக்கம் போல ஆட்டோக்களை நிறுத்தி பயணிகளை ஏற்றி வருகின்றனர். உத்தரவை மீறும் டிரைவர்கள் மீது போக்குவரத்து போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும்.