உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / நியூ ஜான்டூயி பள்ளியில் மாணவர் பதவியேற்பு விழா

நியூ ஜான்டூயி பள்ளியில் மாணவர் பதவியேற்பு விழா

விழுப்புரம்: விழுப்புரம் நியூ ஜான்டூயி பள்ளியில் மாணவர் தலைமை பதவியேற்பு விழா நடந்தது.தாளாளர் வீரதாஸ் தலைமை தாங்கினார். கல்வி நிர்வாக இயக்குனர் எமர்சன் ராபின், கல்வி அதிகாரி சுகன்யா முன்னிலை வகித்தனர். இன்ஸ்பெக்டர் ரேணுகாதேவி சிறப்புரையாற்றினார். தொடர்ந்து, மாணவர் தலைவர், கலை, இலக்கிய தலைவர் விளையாட்டு தலைவர், நன்னடத்தை தலைவர் பொறுப்பில் பதவியேற்று உறுதிமொழி ஏற்றனர். தொடர்ந்து, வீனஸ், நெப்டியூன், மெர்குரி, ஜூபிடர் ஆகிய அணி தலைவர்களும், பள்ளி தலைவர், உதவி தலைவர் பொறுப்பேற்றனர். பின், கடந்தாண்டு 10ம் வகுப்பில் கணக்கு பாடத்தில் நுாறு மதிப்பெண் பெற்ற மாணவர்களுக்கு பரிசு, பதக்கம் வழங்கப்பட்டது. விழாவில், பள்ளி முதல்வர், தலைமை ஆசிரியர், உடற்கல்வி ஆசிரியர்கள், பெற்றோர்கள், ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ