உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / செஞ்சியில் திடீர் மின் தடை

செஞ்சியில் திடீர் மின் தடை

செஞ்சி: செஞ்சியில் மழையின் போது வங்கி எதிரே மின் கம்பி அறுந்து விழுந்ததால் மின் தடை ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக யாருக்கும் பாதிப்பு இல்லை.செஞ்சியில் நேற்று பகல் 2:20 மணியளவில் திடீரென லேசான காற்றுடன் மழை துவங்கியது. மழை துவங்கிய சிறிது நேரத்தில் திருவண்ணாமலை சாலையில் மின் கம்பி அறுந்து, அங்குள்ள வங்கி முன்பு நிறுத்தி இருந்த இருசக்கர வாகனங்கள் மீது விழுந்தது. உயர் அழுத்த மின் கம்பி என்பதால் நகரம் முழுதும் மின் சாரம் தடை பட்டது. தகவல் அறிந்து வந்த மின் வாரிய உதவி பொறியாளர் சதீஷ் தலைமையிலான ஊழியர்கள் மின்கம்பியை சரி செய்தனர். இதன் பிறகு மாலை 4:50 மணிக்கு மீண்டும் மின்சாரம் வழங்கினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை