உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பழங்குடி இருளர் மாணவர்களுக்கு கோடை கல்வி சிறப்பு முகாம் நிறைவு

பழங்குடி இருளர் மாணவர்களுக்கு கோடை கல்வி சிறப்பு முகாம் நிறைவு

திண்டிவனம்: திண்டிவனம் அருகே சிங்கனுார் மாணவியர் விடுதியில் பழங்குடி இருளர் மாணவர்களுக்கான கோடை கல்வி முகாம் நிறைவு விழா நடந்தது.பத்து நாட்கள் நடந்த முகாமில் பல்வேறு பகுதிகளைச் சேர்ந்த நுாற்றுக்கு மேற்பட்ட இருளர் வகுப்பு மாணவ, மாணவியர்கள் பங்கேற்றனர்.முகாமில் ஆங்கிலம், தமிழ், கணிதம், சமூக விழிப்புணர்வு பாடல் நாடகம், நடனம், ஓவியம் போன்ற கல்வி மற்றும் கலைத்திறன் வளர்ப்பு பயிற்சி, குழு விளையாட்டுகள் நடத்தப்பட்டன. நிறைவு விழாவில், போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு வழக்கறிஞர் தமிழரசன் சிகரம் மையத்தின் இயக்குனர் கிறிஸ்டோபர் பரிசு வழங்கினார். இதில் பலவை அமைப்பின் இயக்குனர் ஆரோக்கியசாமி, திட்ட இயக்குனர் ஆனந்த் உட்பட பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



சமீபத்திய செய்தி