உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / ஆறுமுக பெருமான் கோவிலில் ஊஞ்சல் சேவை

ஆறுமுக பெருமான் கோவிலில் ஊஞ்சல் சேவை

திண்டிவனம்: திண்டிவனம் கிடங்கல் ஆறுமுக பெருமான் கோவிலில் ஊஞ்சல் சேவை நடந்தது. திண்டிவனம் கிடங்கல் (1) தெய்வானை உடனுறை ஆறுமுக பொருமான் கோவிலில், 58ம் ஆண்டு ஆடிக்கிருத்திகை விழா கடந்த 28ம் தேதி முதல் நடந்து வருகிறது. நேற்று முன்தினம் காலை 9:00 மணிக்கு ஆறுமுக பெருமானுக்கு சிறப்பு அபிேஷக, ஆராதனை நடந்தது.மாலை 5:30 மணிக்கு சந்தனக் காப்பு அலங்காரமும், சிறப்பு தீபாராதனையும் நடந்தது. தொடர்ந்து 6:00 மணிக்கு ஊஞ்சல் சேவை நடந்தது. இரவு 8:00 மணிக்கு அன்னக்காவடி வீதியுலாவும், 10:00 மணிக்கு இடும்பன் பூஜையும் நடந்தது. திரளான பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை