உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / திண்டிவனத்தில் தமிழ்நாடு ரெட்டி நலசங்கத்தின் முப்பெரும் விழா

திண்டிவனத்தில் தமிழ்நாடு ரெட்டி நலசங்கத்தின் முப்பெரும் விழா

திண்டிவனம்: திண்டிவனத்தில் தமிழ்நாடு ரெட்டி நலசங்கத்தின் முப்பெரும் விழா நடந்தது. தமிழ்நாடு ரெட்டி நல சங்கத்தின், விழுப்புரம் வடக்கு மாவட்டத்தின் சார்பில் திண்டிவனத்தில் நேற்று முப்பெரும் விழா நடந்தது. மயிலம் ரோடு சுலோச்சனா பங்காரு திருமண நிலையத்தில், ஸ்ரீசீதாராம திருக்கல்யாணம், விஜயரத சாந்தி தம்பதியரை கவுரவித்தல், மாணவ, மாணவியிருக்கு பாராட்டு விழா என முப்பெரும் விழாவாக நடந்தது. விழாவிற்கு, விழுப்புரம் வடக்கு மாவட்ட தலைவர் ரவிச்சந்திரன் தலைமை தாங்கினார். மாவட்ட கவுரவ தலைவர் ரமணன் துவக்கஉரையாற்றினார். மாவட்ட செயலாளர் ஜெயப்பிரகாஷ், துணை தலைவர் தர்மசிவம் வரவேற்றனர். விழாவில் சீதாராம திருக்கல்யாணமும், தொடர்ந்து விஜயரத சாந்தி தம்பதியர்களை சங்க நிர்வாகிகள் கவுரவித்து பரிசுகள் வழங்கினர். தொடர்ந்து பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற மாணவ, மாணவியர்களுக்கு சங்கத்தின் சார்பில் பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டனர். தொடர்ந்து நடந்த நிகழ்ச்சியில் தமிழ்நாடு ரெட்டி நலச்சங்கத்தின் மாநில துணை தலைவர் ரவிரெட்டி, தென்னிந்திய ரெட்டி ஜன சங்கத்தின் தலைவர் முத்துமல்லாரெட்டி, தனியார் டி.வி.புகழ் ஜோதிடர் பாலகிருஷ்ணா ரெட்டி ஆகியோர் சிறப்புரையாற்றினர். அணையேரி பஞ்சாயத்து தலைவர் ரவி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கினார். இதில் மாவட்ட, மாநில சங்க நிர்வாகிகள் பேசினர். விழாவில் பல்வேறு பகுதிகளை சேர்ந்த சங்க நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர். விழுப்புரம் வடக்கு மாவட்ட இளைஞரணி தலைவர் துரைராஜ் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை