உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / அரசு பள்ளியில் மழைநீர் குளம்போல் தேக்கம் ஆசிரியர்கள், மாணவர்கள் கடும் அவதி தொற்று நோய் பரவும் அச்சத்தில் பெற்றோர்

அரசு பள்ளியில் மழைநீர் குளம்போல் தேக்கம் ஆசிரியர்கள், மாணவர்கள் கடும் அவதி தொற்று நோய் பரவும் அச்சத்தில் பெற்றோர்

திருவெண்ணெய்நல்லுார் : திருவெண்ணெய்நல்லுார் அருகே உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் மழைநீர் குளம் போல் தேங்கி நிற்பதால் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்கள் கடும் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.திருவெண்ணெய்நல்லுார் அடுத்த ஆனத்துார் கிராமத்தில் உள்ள அரசு மேல்நிலைப் பள்ளியில் 500க்கும் மேற்பட்ட மாணவர்கள் கல்வி பயின்று வருகின்றனர். நேற்று மாலை திருவெண்ணெய்நல்லுார் மற்றும் சுற்றுவட்டார பகுதியில் அதிகளவில் மழைபெய்தது. குறிப்பாக ஆனத்துார் பகுதியில் 61 மி.மீட்டர் மழை பதிவாகியது. இதனால் இப்பகுதியில் உள்ள குளம், குட்டைகள் பெரும்பாலும் நிரம்பி உள்ளது. இந்நிலையில் கனமழை காரணமாக ஆனத்துார் பள்ளி வளாகத்திற்குள் ஒரு அடி ஆழம் தண்ணீர் தேங்கி குளம்போல் நிற்கிறது. இதனால் மாணவர்கள் வகுப்பறைக்கு கூட செல்ல முடியாத சூழல் உள்ளது. சிறிதளவு மழை பெய்தால் கூட பள்ளியில் தண்ணீர் தேங்கி நிற்பது வாடிக்கையாக உள்ளது. எனவே சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மாணவர்கள் நலனில் அக்கறை செலுத்தி மழை நீரை அப்புறப்படுத்தி இனிவரும் காலங்களில் மழை நீர் தேங்காமல் இருக்கும் வகையில் சரி செய்ய வேண்டுமென கோரிக்கை விடுத்துள்ளனர். மழை நீர் ஒரே இடத்தில் குளம்போல் சூழந்துள்ளதால் கொசு உற்பத்தியாகி நோய் தொற்று ஏற்படவும் வாய்ப்புள்ளது. எனவே அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்