உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சிறு விவசாயிகள் முன்னேற்ற சங்கம் முதல்வருக்கு நன்றி

சிறு விவசாயிகள் முன்னேற்ற சங்கம் முதல்வருக்கு நன்றி

திண்டிவனம் : வண்டல் மண் எடுக்க அனுமதி வழங்கிய தமிழ்நாடு சிறு விவசாயிகள் முன்னேற்ற சங்கம் முதல்வருக்கு நன்றி தெரிவித்துள்ளது.இதுகுறித்து முதல்வருக்கு, தமிழ்நாடு சிறு விவசாயிகள் முன்னேற்ற சங்க மாநிலத் தலைவர் மணி அனுப்பியுள்ள கடிதம்:தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகளின் நிலங்கள் களர் நிலமாகவும், மண் நிலங்களாகவும், விவசாயம் செய்ய முடியாத நிலங்கள் உள்ளது. இந்த நிலங்களில் ஏரி, குளங்கள், கண்மாய்களில் உள்ள வண்டல் மண்ணை எடுத்து, நிலங்களில் கொட்டி சீரமைத்துக்கொள்ள முடியும். இதற்கு வண்டல் மண் எடுக்க எளிய முறையில் அனுமதி வழங்க வேண்டும் என எங்கள் சங்கம் மற்றும் பிற விவசாயிகள் சங்கத்தின் சார்பில் முதல்வருக்கு கோரிக்கை வைத்தோம்.விவசாயிகளின் கோரிக்கையை ஏற்று அனைத்து ஏரிகள், குளங்கள், கண்மாய்களில் வண்டல் மண் எடுக்க அனுமதி அளித்து உத்தரவிட்ட முதல்வருக்கு சங்கத்ததின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ