உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / நெல் மூட்டைகள் மழையில் நனைந்தன

நெல் மூட்டைகள் மழையில் நனைந்தன

விழுப்புரம் : நேற்று பெய்த திடீர் மழையால் செஞ்சி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில், நெல் மூட்டைகள் நனைந்தன.செஞ்சி மற்றும் சுற்றியுள்ள பகுதியில் நேற்று கோடை மழை பெய்தது. இதனால், செஞ்சி ஒழுங்கு முறை விற்பனை கூடத்தில் திறந்தவெளியில் வைத்திருந்த விவசாயிகளிடம் இருந்து வியாபாரிகள் கொள்முதல் செய்து இருப்பு வைத்துள்ள 4,500 நெல் மூட்டைகள் நனைந்தன.இங்கிருந்த தார்பாய்களை பயன்படுத்தி உடனே மூட்டைகள் மேலும் நனையாமல் பாதுகாக்கப்பட்டது. விவசாயிகள் நெல் மூட்டைகளை கிடங்கில் வைத்து நேற்று ஏலம் தொடர்ந்து நடந்ததாக விழுப்புரம் ஒழுங்கு முறை விற்பனைக்குழு செயலாளர் சந்துரு தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



புதிய வீடியோ