உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பைக்கில் சென்றவர் மயங்கி விழுந்து பலி

பைக்கில் சென்றவர் மயங்கி விழுந்து பலி

திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அருகே பைக்கில் சென்றபோது திடீரென மயங்கி விழுந்தவர் இறந்தார்.திருவெண்ணெய்நல்லுார் அடுத்த மேலமங்கலம் கிராமத்தைச் சேர்ந்தவர் ஏழுமலை, 53; விவசாயி. இவர், கடந்த 21ம் தேதி மாலை 3:00 மணியளவில் பைக்கில் செம்மாரில் இருந்து மேலமங்கலம் சென்றார்.அப்போது திடீரென மயக்கம் ஏற்பட்டதால் பைக்கிலிருந்து நிலை தடுமாறி கீழே விழுந்தார். இதில், படுகாயமடைந்தவர் விழுப்புரம், முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு,சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார். திருவெண்ணெய்நல்லுார் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை