உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / சிகிச்சைக்கு வந்தவர் மாரடைப்பால் பலி

சிகிச்சைக்கு வந்தவர் மாரடைப்பால் பலி

திண்டிவனம்: திண்டிவனம் அரசு மருத்துவமனைக்கு உடல் நிலை சரியில்லாமல் வந்தவர் சுருண்டு விழுந்து இறந்தார்.திண்டிவனம் பஜனை கோவில் தெருவைச் சேர்ந்தவர் செந்தில்குமார், 41; இவர் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் மனைவியுடன் ஏற்பட்ட கருத்து வேறுபாடுகாரணமாக விவாகரத்து பெற்று தனியாக வசித்து வந்தாார். இவரை நேற்று முன்தினம் நாய் கடித்துள்ளது.இதற்காக திண்டிவனம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற நேற்று காலை 10:00 மணியளவில், சீட்டு போடுவதற்காக நோயாளிகளுடன் வரிசையில் நின்று கொண்டிருந்தார். அப்போது அவர் திடீரென சுருண்டு கீழே விழுந்தார். உடன் டாக்டர்கள் அவரை சோதித்ததில், மாரடைப்பால் இறந்தது தெரியவந்தது.இதுகுறித்த புகாரின் பேரில் ரோஷணை போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை