| ADDED : ஜூலை 18, 2024 11:27 PM
விழுப்புரம்: விழுப்புரம் அருகே முன் விரோத தகராறில் பைக்குக்கு தீ வைத்தவரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் அடுத்த திருவாமாத்துார் கிராமத்தைச் சேர்ந்தவர் பழனி மகன் பாவாடை, 30; கட்டட தொழிலாளி. திருமணமாகி 2 பிள்ளைகள் உள்ளனர். சாணாந்தோப்பு கிராமத்தைச் சேர்ந்தவர் மூர்த்தி மகன் சரவணன், 29; ஆட்டோ டிரைவர். இவர்களுக்கிடையே தகராறு ஏற்பட்டு முன்விரோதம் உள்ளது.இதனால், ஆத்திரமடைந்த சரவணன், கடந்த 16ம் தேதி, பாவாடையின் வீட்டு முன் நிறுத்தியிருந்த அவரது பல்சர் பைக்கை, சரவணன் தீ வைத்து எரித்துள்ளார். தட்டிக்கேட்ட பாவாடை திட்டி, மிரட்டல் விடுத்துள்ளார்.இது குறித்த புகாரின் பேரில், விழுப்புரம் தாலுகா போலீசார் நேற்று முன்தினம் வழக்குப் பதிந்துசரவணனை கைது செய்தனர்.