உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விஷம் குடித்த தொழிலாளி சாவு

விஷம் குடித்த தொழிலாளி சாவு

வானுார் : குடும்ப பிரச்னையில் விஷம் குடித்தவர் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி இறந்தார்.விழுப்புரம் மாவட்டம், சடையாண்டிக்குப்பம் வாய்க்கால் கரையைச் சேர்ந்தவர் கிருஷ்ணமூர்த்தி, 19; இவரது மனைவி லட்சுமி, 19; இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த 25ம் தேதி கிருஷ்ணமூர்த்தி, வானுார் அடுத்த பட்டானுார் பகுதியில் உள்ள மாமியார் செங்கேணி வீட்டிற்கு மனைவி லட்சுமி மற்றும் குழந்தைகளுடன் வந்து தங்கினார்.குடிப்பழக்கம் உள்ள கிருஷ்ணமூர்த்தி குடித்து விட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதனை லட்சுமி கண்டித்தார். இதனால் மனமுடைந்த கிருஷ்ணமூர்த்தி விஷம் குடித்து மயங்கி விழுந்தார்.உடன், புதுச்சேரி கதிர்காமம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு அங்கு அவர், நேற்று முன்தினம் இறந்தார்.லட்சுமி கொடுத்த புகாரின் பேரில், ஆரோவில் போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை