உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / இடைத்தேர்தலுக்கான தபால் ஓட்டுகள் பெறும் பணி தொடக்கம்! முதியோர், மாற்றுத்திறனாளிகளிடம் வீடு தேடி பெற ஏற்பாடு

இடைத்தேர்தலுக்கான தபால் ஓட்டுகள் பெறும் பணி தொடக்கம்! முதியோர், மாற்றுத்திறனாளிகளிடம் வீடு தேடி பெற ஏற்பாடு

விழுப்புரம்: விக்கிரவாண்டி தொகுதியில் இடைத் தேர்தலையொட்டி முதல் கட்டமாக 85 வயதுக்கு மேற்பட்ட முதியோர் மற்றும் மாற்றுத் திறனாளிகளிடம், மொபைல் குழு மூலம் தபால் ஓட்டுகள் பெறுவதற்கான பணி தொடங்கப்பட்டுள்ளது.விக்கிரவாண்டி சட்டமன்ற தொகுதிக்கு ஜூலை 10ம் தேதி இடைத்தேர்தல் நடக்கிறது. 29 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். இத்தொகுதியில் 1,15,749 ஆண் வாக்காளர்கள், 1,18,393 பெண் வாக்காளர்கள், இதர வாக்காளர்கள் 31 என மொத்தம் 2,34,173 வாக்காளர்கள் ஓட்டளிக்க உள்ளனர். மாவட்ட தேர்தல் அதிகாரி கலெக்டர் பழனி தலைமையில் தேர்தலுக்கான ஏற்பாடுகள் நடந்து வருகிறது.முதற்கட்டமாக, இத்தொகுதியில் 85 வயது மற்றும் அதற்கு மேற்பட்ட முதிய வாக்காளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்களின் வாக்கு களை, தேர்தல் துறை அறிவிப்பின்படி, வீட்டி லிருந்தவாறே தபால் வாக்குச்சீட்டின் மூலம் செலுத்திடும் பொருட்டு, சம்மந்தப்பட்ட வாக்காளர்களின் வீடுகளுக்கு சென்று வாக்குகளை சேகரிக்க, நடமாடும் தபால் வாக்குசீட்டுக் குழுக்கள் (Mobile Postal Ballot Team) அமைக்கப்பட்டுள்ளன.இத்தொகுதியில் (முதியோர் மற்றும் மாற்றுத்திறனாளிகள்) 567 வாக்காளர்கள் உள்ளனர். இந்த வாக்காளர்களிடம் விருப்ப மனு (படிவம் 12டி) பெறப்பட்டுள்ளது. அவ்வாறு விருப்பம் தெரிவித்த வாக்காளர்களிடம், இந்த மொபைல் குழுவினர் 1.7.2024 முதல் 3.7.2024 ஆகிய 3 நாட்களில், வீடுகளுக்கு சென்று தபால் வாக்குச் சீட்டுகளை நேரில் அளித்து, அதில் வாக்களித்த பின்னர், அவர்கள் வாக்களித்த தபால் வாக்குச்சீட்டுகளை சேகரிக்கும் பணியினை மேற்கொள்ள உள்ளனர்.இவ்வாறு தபால் வாக்கு செலுத்த விருப்பம் தெரிவித்த 85 வயதிற்கு மேற்பட்ட வாக்காளர்கள் மற்றும் மாற்றுத்திறனாளி வாக்காளர்கள் குறித்த விவரங்கள் மற்றும் நடமாடும் தபால் வாக்குச்சீட்டுக் குழுவினரின் விவரங்கள், தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் உள்ளது.இதனால், தேர்தல் நடத்தும் அலுவலரால் அங்கீகரிக்கப்பட்ட தபால் வாக்குச் சீட்டு வாக்காளர்கள் பட்டியல் மற்றும் நடமாடும் தபால் வாக்குச்சீட்டு குழுவினரின் பணிகள் குறித்த விவரங்களை, அரசியல் கட்சி பிரதிநிதிகள் மற்றும் வேட்பாளர்களின் முகவர்கள் சம்மந்தப்பட்ட தேர்தல் நடத்தும் அலுவலர்களிடம் தெரிந்து கொள்ளலாம்.மேலும், இது குறித்த தகவல்கள் ஏதும் அறிந்து கொள்ள விரும்பினால், விழுப்புரம் கலெக்டர் அலுவலக கட்டுப்பாட்டு அறை எண்: 04146 233132 மற்றும் 04146-221950 என்ற தொலைபேசி எண்களை தொடர்பு கொண்டு தெரிந்துகொள்ளலாம் என்று, விக்கிரவாண்டி தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலர் சந்திர சேகர் தெரிவித்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை