மேலும் செய்திகள்
கூட்டுறவு வங்கி பணியாளர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
3 hour(s) ago
தொழிற்சங்க நிர்வாகிகள் ஆலோசனைக் கூட்டம்
3 hour(s) ago
லட்சுமி நாராயாண பெருமாள் கோவிலில் சிறப்பு அபிேஷகம்
3 hour(s) ago
திருவெண்ணெய்நல்லுார்: திருவெண்ணெய்நல்லுார் அடுத்த பெரியசெவலை நெல் கொள்முதல் நிலையத்தில் தினமலர் செய்தி எதிரொலியால் நெல், மூட்டை பிடிக்கும் பணி நடந்தது.திருவெண்ணெய்நல்லுார் அடுத்த பெரியசெவலை பஸ் நிறுத்தம் அருகே உள்ள நெல் கொள்முதல் நிலையத்தில், சித்திரை பட்டம் அறுவடை முடிந்து விவசாயிகள் விற்பனைக்கு நெல்லைக் கொண்டு வந்து திறந்த வெளியில் குவித்து வைத்திருந்தனர். 20 நாட்களுக்கும் மேலாக மூட்டை பிடித்து எடை போடாமல் இருந்ததால் மழையில் நனைந்து நெல் மணிகள் முளைத்தன.இதுகுறித்து அதிகாரிகள் நடவடிக்கை எடுக்ககோரி நேற்றைய 'தினமலர்' நாளிதழில் செய்தி வெளியானது. அதன் எதிரொலியால் நேற்று காலைமுதல், குவித்து வைத்திருந்த நெல்களை மூட்டை பிடிக்கும் பணி துவங்கியது. இதனால், விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.
3 hour(s) ago
3 hour(s) ago
3 hour(s) ago