மேலும் செய்திகள்
கண்டன ஆர்ப்பாட்டம்
13 hour(s) ago
வேலுநாச்சியார் நினைவு தினம் த.வெ.க., அனுசரிப்பு
13 hour(s) ago
தர்மசாஸ்தா அய்யப்பன் சன்னதியில் மண்டல பூஜை
13 hour(s) ago
ரங்கபூபதி கல்லுாரியில் கிறிஸ்துமஸ் விழா
13 hour(s) ago
கண்டாச்சிபுரம்: கண்டாச்சிபுரம் அருகே கோவில் திருவிழாவில் சப்பரத்தேர் கவிழ்ந்து விபத்திற்குள்ளானதால் பரபரப்பு ஏற்பட்டது.கண்டாச்சிபுரம் அடுத்த கடையம் கிராமத்தில் சூளப்பிடாரி அம்மன் கோவிலில் நேற்று முன்தினம் தேர்திருவிழா துவங்கியது. அதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் நள்ளிரவு முதல் சப்பரத்தேர் ஊர்வலம் வந்தது.அம்மன் கோவில் பகுதியிலிருந்து சப்பரத்தை நேற்று காலை 10 மணி அளவில் கடையம் கிரமத்தினுள் 150 க்கும் மேற்பட்ட பக்தர்கள் தோளில் துாக்கி வந்தனர்.ஒருதெருவில் இருந்து மற்றொரு தெருவிற்குத் திரும்பும்போது சப்பரம் கவிழ்ந்து மின்கம்பிகளின் மீது விழுந்தது.முன்னதாக தேர் ஊர்வலம் காரணமாக மின்வாரிய ஊழியர்கள் கடையம் கிராமத்தில் மின்சாரத்தை நிறுத்திவைத்திருந்ததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது. சப்பரம் கவிழ்ந்த சில நிமிடங்களில் ஊர்மக்கள் நிமிர்த்தி மீண்டும் கோவிலுக்கு எடுத்துச் சென்றனர். சப்பரம் கவிழ்ந்தபோது ஏற்பட்ட கூட்ட நெரிசலால் சிலர் தடுக்கி விழுந்து லேசான காயமடைந்தனர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு ஒரு முறை வெகு விமரிசையாக நடைபெறும் இத்திருவிழாவிற்காக கடையம் கிராம மக்களும் இப்பகுதி மக்களின் உறவினர்களும்,பக்தர்களும் கலந்துகொள்ளும் திருவிழாவில் சப்பரத்தேர் கவிழ்ந்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
13 hour(s) ago
13 hour(s) ago
13 hour(s) ago
13 hour(s) ago