உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / வழிப்பறி வாலிபர் கைது

வழிப்பறி வாலிபர் கைது

அவலுார்பேட்டை : மேல்மலையனுாரில் கத்தியை காட்டி மிட்டி வழிப்பறி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.குடியாத்தம் தாலுகா ஜிட்டப்பள்ளி கிராமத்தை சேர்ந்தவர் ரவி மகன் மோகன், 28. இவர் நேற்று முன்தினம் இரவு மேல்மலையனுார் அங்காளம்மன் கோவிலுக்கு சாமி தரிசனம் செய்ய சென்று கொண்டிருந்தார்.அவரை வழிமறித்த வாலிபர் ஒருவர் கத்தியை காட்டி மிரட்டி, ஆயிரத்து ஐநுாறு ரூபாயை பறித்துக் கொண்டு சென்றார்.புகாரின் பேரில் வளத்தி போலீசார் வழக்குப் பதிந்து, விசாரித்தனர். வழிப்பறி செய்தவர் செஞ்சியை சேர்ந்த ஆனந்தன் மகன் விஜய், 34, என தெரிய வந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்