திண்டிவனம் : வி.சி., தலைவர் திருமாவளவன் பிறந்த நாளையொட்டி, திண்டிவனம் அரசு மருத்துவமனையில் பிறந்த 6 குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கப்பட்டது.வி.சி., தலைவர் திருமாவளவனின் 62வது பிறந்த நாள் விழா நேற்று கொண்டாடப்பட்டது. அதனையொட்டி, திண்டிவனம் அரசு மருத்துவமனையில் நேற்று பிறந்த 3 பெண் குழந்தைகள், 3 ஆண் குழந்தைகளுக்கு தங்க மோதிரம் அணிவிக்கும் நிகழ்ச்சி நடந்தது.நிகழ்ச்சிக்கு, மாவட்ட செயலாளர் வழக்கறிஞர் திலீபன் தலைமை தாங்கினார். செல்வ பிரபாகரன், வழக்கறிஞர் கதிர் முன்னிலை வகித்தனர்.அரசு தலைமை மருத்துவர் ரவிச்சந்திரன், டாக்டர் தமிழ்ச்செல்வி, வி.சி., நிர்வாகிகள் வடிவேலு, விஸ்வதாஸ், பிருந்தா, மகாஅருண், அம்பேத் வளவன், நாகையா, ஏகாம்பரம், மணிபால், சுரேஷ், வெங்கட்தயா, புரட்சி கண்ணன், அபி, தேசிங்கு, தண்டபாணி, கார்மேகம் உள்பட பலர் பங்கேற்றனர்.தொடர்ந்து, திண்டிவனம் மேம்பாலம், காந்தி சிலை, சந்தைமேடு ஆகிய இடங்களில் கட்சிக் கொடியேற்றி வைத்து பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.