உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பெண் எஸ்.ஐ.,க்கு மிரட்டல் மூன்று பேர் கைது 

பெண் எஸ்.ஐ.,க்கு மிரட்டல் மூன்று பேர் கைது 

விழுப்புரம் : விழுப்புரத்தில் பெண் சப்-இன்ஸ்பெக்டரை மிரட்டிய சூதாட்ட நபர்கள் மூவரை போலீசார் கைது செய்தனர்.விழுப்புரம் டவுன் சப்-இன்ஸ்பெக்டர் பிரியங்கா விற்கு, நரசிங்கபுரம் பகுதியில் சட்ட விரோதமாக சிலர் சூதாட்டம் விளையாடுவதாக நேற்று தகவல் வந்துள்ளது. இதன் பேரில், இவர் தலைமையிலான போலீசார், சம்பவ இடத்திற்கு சென்ற போது, பணம் வைத்து மூவர் சூதாடி கொண்டிருந்தனர்.விசாரணையில், புதுச்சேரியை சேர்ந்த ஆரோக்கியசாமி மகன் சேவியர்,33; அரியாங்குப்பம் கிருஷ்ணன் மகன் தெய்வநாயகம், 42; கோலியனுார் கூட்ரோடு துரைாஜ் மகன் ஏழுமலை, 35; ஆகியோர் என்பது தெரிய வந்தது.இவர்கள், சப்-இன்ஸ்பெக்டர் பிரியங்காவை பணி செய்ய விடாமல் தடுத்து மிரட்டல் விடுத்தனர். பின், போலீசார் சேவியர் உட்பட மூவர் மீதும் வழக்குப் பதிந்து கைது செய்தனர். இந்த மூவரிடம் இருந்து ரூ.40 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி