உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / திண்டிவனம் சாராய வியாபாரி தடுப்பு காவல் சட்டத்தில் கைது

திண்டிவனம் சாராய வியாபாரி தடுப்பு காவல் சட்டத்தில் கைது

விழுப்புரம்: திண்டிவனம் அருகே சாராய வியாபாரியை போலீசார் தடுப்பு காவல் சட்டத்தில் கைது செய்தனர்.திண்டிவனம் அருகே ரோஷனையை சேர்ந்தவர் ராஜி மகன் சரண்ராஜ்(எ)கிடங்கலான்,35; இவர், கடந்த ஜூன் 6ம் தேதி தனது வீட்டருகே சாராயம் விற்ற போது, ரோஷனை போலீசார் வழக்குப் பதிந்து கைது செய்தனர். இவர் மீது, ரோஷனை போலீஸ் ஸ்டேஷனில் சாராயம் விற்பனை வழக்குகள் பல நிலுவையில் உள்ளது. இவரது நடவடிக்கையை தடுக்கும் பொருட்டு தடுப்பு காவல் சட்டத்தின் கைது செய்ய, எஸ்.பி., தீபக் சிவாச், கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். கலெக்டர் பழனி உத்தரவின் பேரில், நேற்று ரோஷனை போலீசார், சரண்ராஜை தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்து, கடலுார் மத்திய சிறையில் அடைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி