உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / போக்குவரத்து பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

போக்குவரத்து பாதுகாப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

விழுப்புரம்: விழுப்புரம் அரசு மாதிரி மகளிர் மேல்நிலைப் பள்ளியில் போக்குவரத்து பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.தலைமை ஆசிரியை சசிகலா தலைமை தாங்கினார். விழுப்புரம் போக்குவரத்து பிரிவு இன்ஸ்பெக்டர் வசந்த், போக்குவரத்து பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி பேசினார். அப்போது, புதிய போக்குவரத்து சட்டங்கள் பற்றியும், 18 வயது பூர்த்தியாகாத மாணவர்கள் வாகனங்களை ஓட்டுவது சட்டப்படி குற்றமாகும். இது போல் ஓட்டினால் வழக்குப் பதிவதோடு, அபராதம் விதிக்கப்படும். போக்குவரத்து விதிமுறையை மாணவர்கள் கடைபிடிப்பது மட்டுமின்றி, உங்களின் பெற்றோரும், உறவினர்களுக்கும் நீங்கள் எடுத்து கூற வேண்டும் என அறிவுரை வழங்கினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்