உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்

விவசாயிகளுக்கு பயிற்சி முகாம்

வானுார்: திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் உள்ள வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலக கூட்ட அரங்கில் ஆத்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பயிற்சி முகாம் நடந்தது.வானுார் வட்டாரத்திற்கு நடப்பாண்டில் ஆத்மா திட்டத்தின் கீழ் விவசாயிகளுக்கு பயிற்சி அளித்திட நிதி ஒதுக்கீடு பெறப்பட்டதை தொடர்ந்து திருச்சிற்றம்பலம் கூட்ரோட்டில் உள்ள வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் விவசாயிகள் பயிற்சி முகாம் நடந்தது.வேளாண்மை அலுவலர் ரேவதி வரவேற்றார். பயிற்சிக்கு வானுார் வட்டார வேளாண்மை உதவி இயக்குனர் எத்திராஜ் தலைமை தாங்கி , பயிற்சியின் முக்கியத்துவம் குறித்து எடுத்துரைத்தார்.இறுதியாக ஆத்மா திட்டத்தின் கீழ் நெல் விதைப்பு கருவி 4,000 ரூபாய் மானியத்தில் விவசாயிகளுக்கு வழங்கப்பட்டது. நெல் விதைப்பு கருவி தேவைப்படும் விவசாயிகள் ஆத்மா திட்ட அலுவலரை தொடர்பு கொள்ள கேட்டுக்கொள்ளப்பட்டது. இந்த பயிற்சியில் 40க்கும் மேற்பட்ட விவசாயிகள் பயனடைந்தனர்.நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆத்மா திட்ட அலுவலர்கள் மற்றும் உதவி வேளாண்மை அலுவலர்கள் செய்திருந்தனர்.துணை வேளாண்மை அலுவலர் செந்தில்குமார் நன்றி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்