உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / 18ம் தேதி திருநங்கைகள் குறைகேட்புக் கூட்டம்

18ம் தேதி திருநங்கைகள் குறைகேட்புக் கூட்டம்

விழுப்புரம்: விழுப்புரத்தில் வரும் 18ம் தேதி திருநங்கைகள் மற்றும் திருநம்பிகளுக்கான குறைகேட்புக் கூட்டம் நடக்கிறது.விழுப்புரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள குறைகேட்பு கூட்டரங்கில், வரும் 18ம் தேதி அனைத்து துறைகளோடு ஒருங்கிணைந்து திருநங்கைகள் மற்றும் திருநம்பிகளுக்கு குறைகேட்பு மற்றும் நலத்திட்ட உதவிகள் வழங்கும் முகாம் நடக்கிறது.இந்த முகாமில், திருநங்கைகள், திருநம்பிகளுக்கு நலவாரிய அடையாள அட்டை பெற பதிவு செய்தல், ஆதாரில் திருத்தம், வாக்காளர் அட்டை, முதல்வரின் மருத்துவ காப்பீடு திட்ட அட்டை மற்றும் ஆயுஷ்மான் பாரத் அட்டை ஆகியவை வழங்க நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது.பழைய திருநங்கை நலவாரிய அடையாள அட்டை வைத்திருப்போர், இணையதள அடையாள அட்டைக்கு விண்ணப்பிக்காதவர்கள் தங்களின் விபரத்தை https://tg.tnsw.inஎன்ற இணையதளத்தில் பதிவு செய்யலாம் என மாவட்ட சமூக நல அலுவலகம் மூலம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை