உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / நர்சிங் கல்லூரியில் மரக்கன்று நடும் விழா

நர்சிங் கல்லூரியில் மரக்கன்று நடும் விழா

செஞ்சி: கிளியனுார் ரங்கபூபதி நர்சிங் கல்லுாரியில் மரக்கன்றுகம் நடும் விழா நடந்தது. திண்டிவனம் அடுத்த கிளியனுார் ரங்கபூபதி நர்சிங் கல்லுாரியில் இந்த ஆண்டு 1000 மரக்கன்றுகள் நட முடிவு செய்துள்ளனர். இதன் துவக்க விழாவில் கல்லுாரி முதல்வர் மேனகா காந்தி வரவேற்றார். ஆலம்பூண்டி தமிழ்நாடு கிராம வங்கி மேலாளர் சங்கீதா, ஓய்வு பெற்ற மேலாளர் சிவசங்கர் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கல்லுாரி தாளாளர் ரங்கபூபதி தலைமை தாங்கி மரக்கன்றுகள் நடுவதை துவக்கி வைத்தார். துணை முதல்வர் மாலதி, பேராசிரியர்கள் வினிதா, மீரா லாவண்யா, தனலட்சுமி, பிரகதீஸ்வரி மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





புதிய வீடியோ