உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பழங்குடியினர் சமூக பொருளாதார கணக்கெடுப்பு பணி ஆய்வு கூட்டம்

பழங்குடியினர் சமூக பொருளாதார கணக்கெடுப்பு பணி ஆய்வு கூட்டம்

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை சார்பில், மாவட்டத்தில் உள்ள பழங்குடியினர் சமூக பொருளாதார கணக்கெடுப்பு பணி தொடர்பான ஆய்வுக் கூட்டம் நடந்தது.விழுப்புரத்தில் நடந்த கூட்டத்தில் கலெக்டர் தலைமை தாங்கி பேசியதாவது:மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமங்களிலும், அரசு உத்தரவின்படி பழங்குடியினர் சமூக பொருளாதார கணக்கெடுப்பு பணி, இன்று 1ம் தேதி முதல் இல்லம் தேடிக் கல்வித் திட்ட தன்னார்வலர்கள் மூலம் துவங்குகிறது.மாவட்டத்தில் 532 கிராமங்களில் 22,463 பழங்குடியின குடும்பங்களுக்கு அடிப்படை வசதிகள் வேண்டி கணக்கெடுக்கும் பணிகள் துவங்க இருப்பதால் அனைத்து கிராம ஊராட்சி தலைவர்கள், வி.ஏ.ஓ.,க்கள் ஊராட்சி செயலாளர்கள் கணக்கெடுக்கும் பணிகள் மேற்கொள்ளும் தன்னார்வலர்களுக்கு முழு ஒத்துழைப்பு தர வேண்டும்.இந்த கணக்கெடுப்பு பணிகளில் 149 இல்லம் தேடிக் கல்வி திட்ட தன்னார்வலர்கள் பணிகளை மேற்கொள்ள உள்ளனர். இப்பணி வரும் 15ம் தேதி வரை மேற்கொள்ளப்படுகிறது.எனவே, இக்கணக்கெடுப்பு பணிகள் சிறப்பான முறையில் நடைபெற அனைத்துத் துறையினைச் சார்ந்த அலுவலர்கள் முழு ஒத்துழைப்பு வழங்கிட வேண்டும்.இவ்வாறு கலெக்டர் பழனி பேசினார்.கூட்டத்தில் சமூக பாதுகாப்புத் திட்ட சப் கலெக்டர் முகுந்தன், மாவட்ட ஆதிதிராவிடர் நல அலுவலர் வளர்மதி, ஊராட்சிகள் உதவி இயக்குனர் விக்னேஷ், இல்லம் தேடி கல்வித் திட்ட ஒருங்கிணைப்பாளர்கள் உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





சமீபத்திய செய்தி