உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / காசநோய் கண்டறியும் முகாம்

காசநோய் கண்டறியும் முகாம்

விழுப்புரம் : வளவனுார் அரசு மருத்துவமனையில் காசநோய் கண்டறியும் சிறப்பு முகாம்நடந்தது.சுகாதாரத்துறை சார்பில் நடந்த முகாமில், அதிநவீன நடமாடும் எக்ஸ்ரே வாகனம் மூலம், பொது மக்களுக்கு காசநோய் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. முகாமை, மாவட்ட காசநோய் மைய துணை இயக்குனர் சுதாகர் துவங்கி வைத்தார்.வட்டார மருத்துவர் பிரியா தலைமை தாங்கினார். காசநோய் தடுப்பு குறித்து விழிப்புணர்வும் ஏற்படுத்தப்பட்டது.காசநோய் ஆய்வக நிபுணர் செந்தமிழ்தாசன், ஆல் த சில்ரன் மாவட்ட திட்ட ஒருங்கிணைப்பாளர் கார்த்திக் மற்றும் செவிலியர்கள், மருத்துவ பணியாளர்கள் பலர் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்



அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை