உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / த.வெ.க., முதல் மாநாடு இடம் விழுப்புரம் நிர்வாகிகள் குஷி

த.வெ.க., முதல் மாநாடு இடம் விழுப்புரம் நிர்வாகிகள் குஷி

விழுப்புரம், : தமிழக வெற்றிக்கழகம் முதல் மாநாட்டிற்கான இடத்தை நடிகர் விஜய் உறுதி செய்வதற்குள் விழுப்புரம் மாவட்ட நிர்வாகிகள், அதற்கான ஆயத்த பணிகளில் தயாராகவுள்ளனர்.தமிழக வெற்றிக்கழகம் கட்சி கொடியை, நடிகர் விஜய் கடந்த 22ம் தேதி சென்னை, பனையூரில் அறிமுகம் செய்தார். இதையடுத்து, இந்த கட்சியின் முதல் மாநாட்டிற்கான இடம் தேர்வு செய்யும் பணிகள் மும்முரமாக தலைமையில் நடைபெற்று கொண்டிருக்கிறது. திருச்சி, சேலம், தஞ்சாவூர், விக்கிரவாண்டி என பல இடங்களின் தேர்வு நடைபெறும் நிலையில், த.வெ.க., தலைமையில், பொதுமக்கள் அதிகமாக கூடுவதற்கான வசதியுள்ள இடமாகவும், தமிழகத்தின் மைய பகுதியாக இருக்க வேண்டும் என்பதில் உறுதியாக கொண்டு, ஆலோசனை செய்து வருகின்றனர்.இந்த சூழலில், விழுப்புரம் மாவட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள், விக்கிரவாண்டியில் தாங்கள் தேர்வு செய்து தலைமைக்கு அனுப்பிய இடமே நிச்சயமாக தேர்வாகவுள்ளதாக எண்ணி கொண்டு, மாநாடு விளம்பர போஸ்டர்கள், டிஜிட்டல் பேனர்களை அடித்து வைத்து, இடத்தை மட்டும் காலியாக விட்டு வைத்து தயார் நிலையில் உள்ளனர்.தலைமையின் முறையான அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருப்பதோடு, கட்சியின் முதல் மாநாடு விழுப்புரம் மாவட்டத்தில் அமைந்தால், நடிகர் விஜய்யின் வெற்றிக்கு சென்டிமென்டாக இந்த மாவட்டம் அமைந்து விடும் என எண்ணி செம குஷியோடு காத்திருக்கின்றனர். கூடிய விரைவில் த.வெ.க., தலைவரான நடிகர் விஜய் மாநாடு இடத்தை ஒகே செய்தவுடன், தலைமையில் இருந்து முறையான அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி