உள்ளூர் செய்திகள்

/ உள்ளூர் செய்திகள் / விழுப்புரம் / பெண்ணை தாக்கிய  இருவர் கைது

பெண்ணை தாக்கிய  இருவர் கைது

விழுப்புரம்: காணை அருகே காங்கேயனுார் கிராமத்தை சேர்ந்தவர் சபரிராஜா மனைவி அனிதா,27; இவர்களுக்கு இரு மகள்கள் உள்ளனர். கடந்த 2018 ம் ஆண்டு, சபரிராஜாவிற்கு வேறொரு பெண்ணுடன் தொடர்பு ஏற்பட்டு சென்னைக்கு சென்று விட்டார்.பின், அனிதா, அதே பகுதியில் சரவணன் என்பவருக்கு சொந்தமான 1 சென்ட் இடத்தில் குடிசை வீடு கட்டி வசித்து வருகிறார். கடந்த 31ம் தேதி சபரிராஜாவின் தந்தை சுந்தரமூர்த்தி,50; இவர் மனைவி அஞ்சுலட்சம்,48; மகன் அய்யப்பன்,32; உறவினர் சரவணன்,46; ஆகியோர் அனிதாவை திட்டி தாக்கி ஊரை விட்டு வெளியேபோ என திட்டியுள்ளனர்.அனிதா அளித்த புகாரின் பேரில், காணை போலீசார் 4 பேர் மீது வழக்குப் பதிந்து அய்யப்பன், சரவணனை கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்





அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை